மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மி...
மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்சார அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கட்டணத்தை செலுத்துவதற்காக பாவனையாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இன்றும் இரண்டு மூன்று மாதங்கள் இவ்வாறு சென்றால் நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
´தற்போது சுமார் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் அறவிடப்படவுள்ளது. எனினும் அதற்கு நாம் வட்டி அறவிடவில்லை. 12% இடைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை நாம் ஊக்கப்படுத்தியுள்ளோம். கட்டணம் செலுத்த கூடியவர்களும் செலுத்துவதில்லை. அது தான் பிரச்சினை. முடிந்தளவில் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.´