நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவே கூடாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்க...
நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவே கூடாது.
இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் , கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை இல்லாமல் பண்ண தினமும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் ,எரிச்சல் போன்ற பழக்கங்களைத் துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி கட்டாயமானது.
இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். அதன் பின் தான் உடற்பயிற்சி நிலையங்களைத் தேடுகின்றனர். ஏன் இப்பயிற்சி நிலையங்களை முன்னரே தேடி தேவையான அறிவுரைகளைப் பெற்று நோய்கள் வருமுன் காக்கலாமே.
பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். வருமுன்னே காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு முன் இடப்பட்ட துரும்பாய் பொசுங்கிப் போகும் என்பது பொய்யா மொழி. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று சொல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும்.
உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியவையும் கூட.
உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்குத் தெரியாத ஒன்று, எளிய உடற் பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய நீங்கள் நினைப்பது போன்று விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். அது ஒன்று தான் தேவை. எனவே அலட்சியம் செய்யாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுடன் ஆரோக்கியமான உணவையும்எடுத்துப் பழகுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு
Cherry (0763894656)
Northern Dance Fit