எதிர்வரும் திங்கட்கிழமை (25) கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதிலும், பிற்பகல் 2 மணிக்கு நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை முன்ன...
எதிர்வரும் திங்கட்கிழமை (25) கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதிலும், பிற்பகல் 2 மணிக்கு நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க ஆசிரியர் − அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 25ம் திகதி முதல் நவம்பர் 2ம் திகதி வரை பெற்றோரை தெளிவூட்டும் நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளுக்கு முன்பாக நவம்பர் மாதம் 03ம் திகதி காலை 8 மணிக்கு பெற்றோரின் பங்குப்பற்றுதலுடனான எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் − அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது.