அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்...
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 250 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதேவேளை நிதி அமைச்சினால் ஏதேனும் வரி அறிவிக்கப்படும் பட்சத்தில், பால் மாவிற்கான விலை மேலும் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.