எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வக...
எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 680 பாடசாலைகளை 21ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர்களுடன் நிகழ்நிலை (Zoom) இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
எனினும் வடக்கில் திறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.