உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சர்வதேச பயணிகளை தமது நாட்டிற்குள் அமெரிக்கா அனுமதிப்பதற்கு த...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சர்வதேச பயணிகளை தமது நாட்டிற்குள் அமெரிக்கா அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம், பைசர், மொர்டோனா, ஜோன்ஸன், அஸ்ட்ராசேனிகா மற்றும் சினோபாம் மற்றும் சினோவெக் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.