கொவிட் தடுப்பூசியின் வலுவை, டெல்டா வைரஸ் பிறழ்வு வெகுவாக குறைப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதா...
கொவிட் தடுப்பூசியின் வலுவை, டெல்டா வைரஸ் பிறழ்வு வெகுவாக குறைப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளையும் (DOSE) செலுத்தி பின்னரான, மூன்று மாதங்களில், டெல்டா வைரஸ் பிறழ்வு, அந்த தடுப்பூசியின் வலுவை குறைப்பதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து, டெல்டா வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் குறைவு எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த ஆய்வானது, ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாகவும், மேலும் உறுதிப்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் டொக்டர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.