நாட்டில் கருப்பு சந்தையில் 12.5 கிலோ எடையுள்ள காலி எரிவாயு சிலிண்டரானது ரூ.15,000 முதல் ரூ. 20,000 வரையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. ம...
நாட்டில் கருப்பு சந்தையில் 12.5 கிலோ எடையுள்ள காலி எரிவாயு சிலிண்டரானது ரூ.15,000 முதல் ரூ. 20,000 வரையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரானது ரூ.8000 முதல் 12,000 வரையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பெரிய எரிவாயு நிறுவனங்களும் பல மாதங்களாக தங்கள் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றன.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முன் வீடு உபயோக எரிவாயு சிலிண்டர் சராசரியாக ரூ.4,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட்ட நிலையில் தற்பொழுது குறித்த விலை அதிகரிப்பானது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.