வடமாகாண நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகள் சிலர் கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை ஊடகங்களை பயன்படுத்தி திசை திருப்ப முயற்சிப்பதாக வடமாகாண ...
வடமாகாண நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகள் சிலர் கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை ஊடகங்களை பயன்படுத்தி திசை திருப்ப முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் வடமாகாண நிர்வாக சேவையில் சில முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பில் எனக்கு பலரும் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சில அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக தவறுகளை மறைப்பதற்கும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதற்கும் முற்படுகிறார்கள்.
மக்களின் முறைப்பாடுகள் வழங்கிய பின் அலுவலக நேரமான எட்டு மணித்தியாலத்துக்குள் அது குறித்து கவனம் செலுத்தி மூன்று நாட்களுக்கு மேற்படாமல் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
ஆகவே கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக நீதியான தவறுகளை ஆதாரங்களை சமர்ப்பித்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.