வல்வெட்டித்துறையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியிலேய...
வல்வெட்டித்துறையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியிலேயே இவ்வாறு இராணுவமும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ள நிலையிலேயே இராணுவமும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
யுதத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இராணுவ வாகனங்களும் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.