பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரத...
பூஸ்டர் தடுப்பூசியினை  பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஒமிக்ரோன் வைரஸானது மேலைத்தேய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது எனினும் இலங்கையை பொறுத்தவரை பெரும்பாலானோர்  தடுப்பூசியினை பெற்றதன் காரணமாக  தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு 
கொரோனா  தடுப்பூசி பெற்று ஆறு  மாதத்தின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன்  காரணமாக  போஸ்டர் டோஸ்வழங்கப்படுகின்றது அதனை அனைவரும் பெறும் போது ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவாகும் 
எனினும் இது தொடர்பில் நாம் அதிகம் பயப்படத் தேவையில்லை எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்து கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இந்த தொற்றிலிருந்துபாதுகாத்துக்கொள்ள முடியும்
குறிப்பாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை இந்த ஓமிக்ரோன் வைரஸானது கடுமையாகப் பாதிக்கும் எனவே சிறுவர்களை நாம் இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு கட்டாயமாக  தடுப்பூசியினைபெற வேண்டும் அத்தோடு எமது பிரதேசங்களில் தடுப்பூசியினை   பெற பின்னடிப்பது மிகவும் தவறானது 
எனவே அனைவரும் இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசியினைபோடுவதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் அத்தோடு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஒமிக்ரோன் போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்என்றார்.

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
