தற்போதைய நெருக்கடி நிலையில் சிறப்பாக நடத்த முடியாவிட்டால் அரசாங்கம் பதவியை விட்டு விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தல...
தற்போதைய நெருக்கடி நிலையில் சிறப்பாக நடத்த முடியாவிட்டால் அரசாங்கம் பதவியை விட்டு விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள்.ஜெயேந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தூங்கி எழும்போது பொருட்களின விலை அதிகரிக்கின்றது. தற்போது எரி பொருட்களின் விலைகளும்
உயர்ந்துள்ளது.இதன் மூலம் ஒவ்வொரு பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.இலங்கையில் 90 சதவீதமான மக்கள் வறுமையில் இருக்கும் போது 10
சதவீதமானவர்களிடமே பணம் குவிந்து காணப்படுகிறது.
சிங்கள மக்கள் கூட தற்போது பெரிய துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் அரசாங்கத்தை சிறப்பாக நடத்த முடியாவிட்டால் அவர்கள் பதவியை விட்டு விலக வேண்டும்.
இந்திய மீனவர்கள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது. இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதையே நமது கட்சி விரும்புகின்றது. அதனை கடற்றொழில் அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.