அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர், துப்பாக்கி பிரயோகம் ...
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர், துப்பாக்கி பிரயோகம் நடத்தியதன் பின்னர் எத்திமலை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.
துப்பாக்கி பிரயோகம் நடத்தியமை தொடர்பில் இதன்போது தனது பெற்றோருக்கு அவர் கூறியதாகவும் அவரது தாய் குறிப்பிடுகின்றார்.
காலில் நடத்தப்பட்டிருந்த சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு பொலிஸ் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், தனது மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனது மகன் துப்பாக்கி பிரயோகம் நடத்திய பின்னர், தனது சொந்த கெப் ரக வாகனத்தின் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இடைநடுவில் கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் அவர் தாய் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தப்பித்து, வீட்டிற்கு வருகைத் தந்த தனது மகன், பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபரின் தாய் கூறுகின்றார்.
World Express Services
தான் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் சரணடைய போவதாக சந்தேகநபர் பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றால், இடைநடுவில் பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்த முடியும் எனவும், எத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறும் அவரது தந்தை கூறியுள்ளார்.
இதையடுத்தே, தனது மகன் எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று, அனைத்து பொருட்களையும் ஒப்படைத்து சரணடைந்துள்ளதாக அவரது தாய் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை, எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்து, அம்பாறை பொலிஸ் தலைமையக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.