தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கரை ஒதுங்கியது . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமனாறு கடற்கரையில் மனித...
தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கரை ஒதுங்கியது .
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் கவனத்திற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் கொண்டு வந்ததைத் தொடர்ந்து குறித்த மனித எச்சங்களை நீதவான் பார்வையிட்டார்.
குறித்த மனித எச்சங்கள் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.