கொழும்பு துறைமுக நகரில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நடைபாதை மற்றம் சிறிய படகு பிரிவு ஆகியன இன்று (10) முதல் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்...
கொழும்பு துறைமுக நகரில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நடைபாதை மற்றம் சிறிய படகு பிரிவு ஆகியன இன்று (10) முதல் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறிய படகு பிரிவு ஆகியன, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 500 மீற்றர் நீளத்தை கொண்டதாக இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களுக்கு இந்த நடைபாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலின் வழியான இந்த நடைபாதைக்குள் பிரவேசிக்க முடியும்.
கடலுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் ஊடாகவும் பயணிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.