வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நால்வருக்கு நாளை முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின...
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நால்வருக்கு நாளை முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவினால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவிற்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படவுள்ளனர்.
இதற்கமைய தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், ஆளுநர் செயலக செயலாளர் திருமதி.சரஸ்வதி மேகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்படுவதோடு தற்போதைய பேரவைச் செயலகத்தின் செயலாளர் எஸ்.குகநாதன் பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகமாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேநேரம் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் பேரவைச் செயலகச் செயலாளராகவும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
இதற்கான அறிவித்தல் 19ஆம் திகதி மாலையே தொலை நகல் மூலம் அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது.