வடமராட்சி மந்திகை பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி தனியார் ஒருவருர் கட்டடத்தின் மேல்தளக் கூரை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள...
வடமராட்சி மந்திகை பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி தனியார் ஒருவருர் கட்டடத்தின் மேல்தளக் கூரை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பருத்தித்துறைப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த பகுதியிலே இவ்வாறு அனுமதியின்றி மேல்தள வேலைகள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் அரியகுமாரைத் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த தனியார் கடை உரிமையாளர் தனது ஆரம்ப கட்ட டத்தை அமைக்கும்போதே பிரதேச சபைக்கு அறிவிக்காமல் குறித்த கட்டடத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதிகளையும் குறித்த தனியார் உரிய முறையில் பெறப்படாததால் தண்டப்பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்பின்னர் உரியமுறையில் கட்டடத்தை அமைப்பதற்கான அனுமதிகள் பெறப்பட்டு கட்டடம் அமைக்கப்பட்டது.
பின்னர் அனுமதியின்றி மேல்தளத்தில் நிர்மாண வேலைகள் இடம்பெறுவதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டட வேலைகளை நிறுத்துமாறு எழுத்து மூலமான கடிதம் அனுப்பப்பட்டது.
தற்போது குறித்த கட்டடத்தின் மேல் தளத்தின் இடம்பெற்ற வேலைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில் நிர்மாண வேலைகள் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.