கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை..

கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை..

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ...

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் மீனவர்கள் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

07 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 12 மீனவர்களும் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்தார்.


விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைகள் அத்தியட்சகரூடாக மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அங்கிருந்து மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 02 படகுகளையும் அரசுடமைக்கி, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் இழுவைமடி தொழிலில் ஈடுபட்டமை ஆகிய 02 குற்றச்சாட்டுக்களும் மீனவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 59 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் 12 பேர் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதையடுத்து, மேலும் 47 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 11 படகுகளும் இம்மாதத்திற்குள் மாத்திரம் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை..
கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை..
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhg9Wa1aN3yJsHp8W-mfpsQ73BVKA_ryRpfKqDBkI-WSjB0n7aWWNYroRm9F4ThNrUT_-wx5e672tAQzJ5eOdA3tqRpjEcXjjm7DmuC0n6qyqS7WXVF0FszTh17aJLQ4vnCqKpSUtTe8FJrTX9OaicnQvp66D95gUvIwYG4e-aCgFpRIDV6iF98wAFX=w640-h354
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhg9Wa1aN3yJsHp8W-mfpsQ73BVKA_ryRpfKqDBkI-WSjB0n7aWWNYroRm9F4ThNrUT_-wx5e672tAQzJ5eOdA3tqRpjEcXjjm7DmuC0n6qyqS7WXVF0FszTh17aJLQ4vnCqKpSUtTe8FJrTX9OaicnQvp66D95gUvIwYG4e-aCgFpRIDV6iF98wAFX=s72-w640-c-h354
Yarl Express
https://www.yarlexpress.com/2022/02/12.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/02/12.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content