உக்ரைனுக்கு உடனடியாக ஆயுதங்கள் உட்பட தளபாடங்களை வழங்க அமெரிக்கா ,பிரிட்டன் உட்பட 28 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஆயுதங்கள் தமது நாட்டுக்க...
உக்ரைனுக்கு உடனடியாக ஆயுதங்கள் உட்பட தளபாடங்களை வழங்க அமெரிக்கா ,பிரிட்டன் உட்பட 28 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
மேலும், பிரான்ஸில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் வந்துக்கொண்டிருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆதிக்கம் உக்ரைனுக்குள் அதிகரித்து வரும் நிலையில், 28 நாடுகளின் ஆயுதங்களை உக்ரைன் பெற்றுக்கொள்ளுமானால் மோதல் நிலை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக ஒரு பேரழிவு ஏற்படுமெனவும், மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.