ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..! பொது போக்குவரத்தை சீர்ப்படுத்த மாவட்ட மட்டத்திலான கூட்டங்களால் பயனில்லை..

ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..! பொது போக்குவரத்தை சீர்ப்படுத்த மாவட்ட மட்டத்திலான கூட்டங்களால் பயனில்லை..

யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் ...

யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் பூச்சியத்தில் முடிந்துள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார். 


நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தீவக பொது போக்குவரத்தில் அடிக்கடி படகுகள் பழுதடைவதன் காரணத்தினால் தடைப்படுகின்றது. 

அதேநேரம் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளும் போது பயண நிலையானது மிகவும் அபாயமாக காணப்படுகிறது.தீவகதற்கான பொதுப் போக்குவரத்து தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். 

இந்த தீவக போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பாக இருந்து அவர்கள் படகுகள், பாதை மற்றும் குமுதினி படகு போன்றவற்றை இயக்கி வருகிறார்கள். குமுதினி படகு பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது அதேபோல நெடுந்தாரகை, வடதாரகை சமுத்திரா போன்ற படகுகள் 

பிரதேச சபையினரால் கூட்டுறவு அமைப்பினரால் இயக்கப்படுகிறது.அதேவேளை வடதாரகை இலங்கை கடற்படையினரால் இயக்கப்படுகின்றது இந்த படகுகள் அடிக்கடி பழுதடைவதன் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது.

ஏனைய தீவுகளில் படகு பாதை தற்பொழுது சீரமைக்கப்பட்டு பயணம் தொடர்ந்தாலும் இயந்திரம் பழுதடைந்து நிலைமையில் பாதை இயக்க முடியாது இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

இன்றும் கூட பொது மக்கள் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர் அதாவது இந்த படகு, பாதையை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

அண்மைக்காலங்களில் ஊடகங்களில் மூலமும் இந்த பிரச்சினைகள் வலுப்பெற்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாங்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் ஏனைய திணைக்களங்களுடனும் வடமாகாண ஆளுநருடன் இணைந்து சகல தரப்பினரிருடன் கலந்துரையாடல்களை நடாத்தி இது பற்றி ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம்.

இருந்த போதிலும் சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் காரணமாக அவற்றை முழுமையாக அமுல்படுத்துவது சற்று சிரமம் காணப்படுகின்றது. 

இருந்தபோதிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த படகு போக்குவரத்து சேவை முழுவதையும் பொறுப்பெடுத்து அங்கு ஒரு மத்திய நிலையத்தினை தீவகம் உள்ளடங்களாக ஒரு மத்திய நிலையத்தினை அமைத்து அங்கு ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளரின் கீழே அந்த படகு பாதை சேவைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு உரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய முன்மொழிவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரிடம் விடுத்துள்ளோம் அது தொடர்பில் உரிய அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை அமைச்சே இதற்கு முடிவெடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இருந்தபோதிலும் சில நடைமுறை சிக்கல்கள் சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் முடிவெடுத்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய கடப்பாடு நெடுஞ்சாலைகள் அமைச்சு 

மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு காணப்படுகின்றது. இதனை துரிதப்படுத்தி பொதுமக்களுக்குரிய சேவையினை சீராக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

இருந்தபோதிலும் தாமதம் அடைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் பொதுமக்கள் இதனால் மிகவும் அவதியுறும் நிலையில் காணப்படுகின்றது.இதனை செயற்படுத்த ஒரு விசேட கலந்துரையாடல் மூலம் இதனை மேல்மட்டத்திற்கு கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுப்பதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எனினும் மாவட்ட மட்டத்தில் பல தடவைகள் கூட்டங்களை நடத்தியும் அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. படகுகள் திருத்தப்படாமைக்கு படகின் தன்மை காரணம் அதாவது திருத்தக் கூடிய இடம் வடக்கில் இல்லை. 

அது பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று அதனைத் திருத்தி அமைக்க வேண்டும்.இந்த இரண்டும் பிரதானமாக பிரச்சனையாக காணப்படுகின்றது அதற்கு நாங்கள் மாற்று ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. 

எனவே மாற்றீடாக பயன்படுத்த நமக்கு போதியளவுபடகு இல்லை என்பதும் ஒரு காரணமாக காணப்படுகின்றது மாற்றீடான படகுகள் வழங்கும் பட்சத்தில் அதற்குரிய எரிபொருள் வழங்குவதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது என தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..! பொது போக்குவரத்தை சீர்ப்படுத்த மாவட்ட மட்டத்திலான கூட்டங்களால் பயனில்லை..
ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..! பொது போக்குவரத்தை சீர்ப்படுத்த மாவட்ட மட்டத்திலான கூட்டங்களால் பயனில்லை..
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEijxY7YgqNxs3Eb1yU6gdOxoT3TuMXjwqvh9-0Pvhuc3BttWWzEyxCxhO5ccU42Yems9RnQQDttw5Y74FLqReaCrTmXy7v4e-NCs7SSHhjjhKqKJruyA8drQ_AO7pRjagsgeuEBhLxidqIg04KDXlBusAJd7KOTnVQJWkFt9Zf1WdVmDLgN1H69Ptqs=w640-h480
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEijxY7YgqNxs3Eb1yU6gdOxoT3TuMXjwqvh9-0Pvhuc3BttWWzEyxCxhO5ccU42Yems9RnQQDttw5Y74FLqReaCrTmXy7v4e-NCs7SSHhjjhKqKJruyA8drQ_AO7pRjagsgeuEBhLxidqIg04KDXlBusAJd7KOTnVQJWkFt9Zf1WdVmDLgN1H69Ptqs=s72-w640-c-h480
Yarl Express
https://www.yarlexpress.com/2022/02/blog-post_39.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/02/blog-post_39.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content