யுக்ரேனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது நடந்த பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர், 112 பேர் காயமடைந...
யுக்ரேனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது நடந்த பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர், 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கார்கிவ் நகரின் மாநில நிர்வாகத்தின் ஆளுநர், செவ்வாய் அன்று இரவில் கார்கிவ் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், அனைத்து ரஷ்ய தாக்குதலையும் "நாங்கள் எதிர் கொண்டோம்" மற்றும் தற்போது தாக்குதல் நடத்திய பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் கார்கிவ் ஆளுநர் ஓலே சினெகுபோவ் கூறுகையில், "ரஷ்ய படை இழப்புகளை சந்தித்துள்ளது" என்று தெரிவித்தார்.
ரஷ்ய படைவீரர்கள் கார்கிவ் நகரின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்குள் நுழைந்து, ஜெட் பீரங்கிகளால் தாக்கினர்.