வங்கிகளினால் வழங்கப்படும் கடன் அட்டைகள் மற்றும் வரவட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்...
வங்கிகளினால் வழங்கப்படும் கடன் அட்டைகள் மற்றும் வரவட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இதை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி ஜோன் புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன், டொலர் தட்டுப்பாடும் அதனை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை காரணமாக புதிய கடனட்டைகள் முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் காலாவதியான அட்டைகளுக்கான புதிய அட்டை என்பவற்றை பெற்றுக் கொள்வதில் மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.