முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் தமிழ்நாடு - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கழகச் செய்தி தொடர்ப...
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் தமிழ்நாடு - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கழகச் செய்தி தொடர்புச் செயலாளர் மதிப்புறு கே.எஸ் இராதாகிருஷ்ணன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பில் முல்லைத்தீவின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும், தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தன.
இச்சந்திப்பில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.