உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, சந்தையின் நேற்றைய நிலவரத்தின் பிரகாரம், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயி...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன்படி, சந்தையின் நேற்றைய நிலவரத்தின் பிரகாரம், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 96.66 டொலராக காணப்பட்டது.
இரண்டு வாரங்களின் பின்னர், பதிவான மிகக் குறைவான விலை இதுவாகும்.
ரஷ்யா − யுக்ரேன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை படிப்படியாக உயர்வடைய ஆரம்பித்தது.
இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 65 டொலர் முதல் 130 டொலர் வரை திடீரென அதிகரித்திருந்தது.
எனினும், இன்று மசகு எண்ணெயின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.