ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ரஷ்ய...
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2,000.69 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1998.38 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்.