ரஷ்யாவின் படைவீரர்கள் தற்போது தெற்கு யுக்ரேனின் கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கெர்சன் நகரம்...
ரஷ்யாவின் படைவீரர்கள் தற்போது தெற்கு யுக்ரேனின் கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கெர்சன் நகரம், இதுவரை யுக்ரேனில், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.நேற்று இரவில் ரஷ்ய படைவீரர்கள் கெர்சன் நகரின் தெருக்களில் காணப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கெர்சனின் ரயில் நிலையம் மற்றும் துறைமுகம் கைப்பற்றப்பட்டதாக கெர்சனின் மேயர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.