ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாற...
ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.