நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடு...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியும் சிறிகாந்தா தெரிவித்தார்.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக கருத்துக்கள் தெரிவிப்பதை விட கூட்டாக தீர்மானங்கள் எடுப்பதே சிறந்தது. இந்த விடயத்தில் இணக்கமான முடிவொன்று எட்டப்பட்டது.
இன்றையதினம் பங்கேற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதிகளை தெரிவுசெய்து செயற்பாட்டுக் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் ஒன்று கூடி மீண்டும் இது தொடர்பாக கலந்துரையாடுவோம் என்றார்.