அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றைய தினம் (17)ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கேட் என்பன அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டாருக்கும் , அருகில் உள்ள வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.