புதிய பிரதமராக நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பதவியை...
புதிய பிரதமராக நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பல கட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரியிருந்த நிலையில், தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு எந்தவொரு கட்சித் தலைவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.