அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர்...
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.