பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ், தீவகம்,வேலணை...
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ், தீவகம்,வேலணை மேற்கு சரவணையை சேர்ந்த திரு விசுவாசம்
செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் ஊர்காவற்துறை லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான,தலைவர்
நா.தனேந்திரன்,செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,இணைப்பாளர் இ. மயில்வாகனம் போன்றோரால் குறித்த விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகளிடம் ரூபா இருபத்தி ஐந்தாயிரம் பெறுமதியான விழையாட்டு உபகரணங்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் யாழ் தலைமைச் செயலகத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.