மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட...
மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது,
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்தார்.
அத்துடன், அவர் நலமுடன் இருப்பதாகவும், தனது அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி அவர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.