வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் மது போதையில் குழப்பம் விளைவித்...
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் மது போதையில் குழப்பம் விளைவித்ததாக பாதிக்கப்பட்டவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் நடந்தது தெரிய வருவது நேற்றைய தினம் சித்தங்காடி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று எரிபொருளை பெற்றபோது இடையில் சில இளைஞர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் நின்ற போலீசாரின் உதவியுடன் எரிபொருள் வழங்கப்பட்டது .
இந்த நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் வரிசையில் நின்ற ஒருவர் எரிபொருள் நிலையக் கடமைக்கு பொறுப்பாக நின்ற தமிழ் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் இவ்வாறு வழங்குவது பிழை என கூறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது தாமஸ் போலீஸ் உத்தியோகத்தர் நியாயம் கேட்டவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில் குறைத்த பொலிஸ் உத்தியோத்தர் மது போதையில் நின்றதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் பட்டுக்கோட்டை போல சிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.