தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இலங்கையில...
தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த திங்கட்கிழமை காலை கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில், மன்னாரைச் சேர்ந்த இரு வயோதிபர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் பரமேஸ்வரி என்ற வயோதிப பெண் தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.