எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்க...
எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும் முகவர்கள் ஊடாகவும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை விற்பதாக தகவல்கள் வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக தகவல்களை 1345 என்ற லாப்ஸ் எரிவாயுவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.