தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. உலகத் தமிழ் பண்பாட்...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் ஸ்தாபகர் சோமசுந்தரம் தங்கராசா மல்லிகா குடும்பத்தினரால் அவர்களது மகள் பிரியாவின் நினைவாக இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் வைத்தியசாலையின் அத்தியட்சகரிடம் இந்த மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது.