சமூக சேவைகளை ஆற்றி வருகின்ற யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகத்தினால் அரியாலை, நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் ஏற்பட...
சமூக சேவைகளை ஆற்றி வருகின்ற யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகத்தினால் அரியாலை, நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து மக்களை பாதுகாப்பற்ற புகையிரத கடவை தொடர்பாக விழிப்புணர்வு அடையசெய்யும் நோக்குடன்
"விபத்து விழிப்புணர்வு பதாகை" யை யாழ் மாநகர சபை அனுமதியுடன் அப்பகுதியில் காட்சிப்படுத்தியது. இந்த விழிப்புணர்வுப் பதாகையானது விபத்துக்குள்ளான பகுதி குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பழைய விபத்து புகைப்படங்களுடன் மூன்று மொழிகளில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்தினை யாழ்ப்பாண மேயர் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன், மற்றும் யாழ் மாநகர உறுப்பினர் திரு.பார்த்தீபன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் இதில் யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழக உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.