யாழ் கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்தும் தமக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து ஏ-9 வீ...
யாழ் கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்தும் தமக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து மக்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக ஆட்டோ சாரதிகள் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள் என பல ஆயிரம் பேர் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்தனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கு திணைக்களத் தலைவர்களின் அனுமதி கடிதத்துடன் எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் மறுபுறம் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
மாலை வேளை எரிபொருள் முடிந்து விட்டது என எரிபொருள் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அஞ்சி நின்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தான் மூன்று நாட்களாக தமது வாகனங்களை எரிபொருட்களாக காத்திருக்கின்ற நிலையில் அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு கிழமையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலை செய்பவர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
நமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்குவது போன்று எமக்கும் எரிபொருளை மாவட்ட செயலாளர் பெற்றுத்தர வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.