லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சிறு அளவில் அதிகரிப்பதற்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்....
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சிறு அளவில் அதிகரிப்பதற்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 அல்லது அதனை அண்மித்த தொகையினால் விலையை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலையை 5100 அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
லிட்ரோ 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது 4860 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.