சாவ கச்சேரியில் அமைந்துள்ள ஐஓஎஸ்சி எரிபொருள் நிலையத்தின் செயல்பாடுகளை குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்ப...
சாவ கச்சேரியில் அமைந்துள்ள ஐஓஎஸ்சி எரிபொருள் நிலையத்தின் செயல்பாடுகளை குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது யாழ் மாவட்டத்தில் மூன்று ஐஓசி ஏரி பொருள் நிலையங்களில் சுழற்சி அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வருகிறது.
இந்நிலையில் சாவகச்சேரி அயோத்தி எரிபொருள் நிலையம் பொதுமக்கள் அரச அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ஒழுங்கு படத்தல் அடிப்படையில் நேர்த்தியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிறிதொரு எரிபொருள் நிலையத்தில் நடந்த சம்பத்தை சாவகச்சேரி எரிபொருள் நிலையத்தில் நடந்த சம்பவங்களாக சித்தரித்து சில விஷமிகள் குறித்த எரிபொருள் நிலையத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றன.
இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை யாரென குறித்த எரிபொருள் நிலையத்தினர் ஆராய்ந்த போது வடமராட்சி பிரதேசங்களில் இருந்து தமது எரிபொருள் நிலையத்துக்கு வருகை வந்து எரிபொருள் பெற்றவர்கள் தமக்கு மோட்டார் சைக்கிளில் கொள்ளளவு முழுவதற்கும் எரிபொருள் வழங்குமாறு கூறிய நிலையில் வழங்க மறுத்த காரணத்தினால் இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவாத அறியா கிடைத்ததாக தெரிவித்தனர்.