35 ரூபாய் விற்கவேண்டிய தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சட்ட நடவடிக்கை...
35 ரூபாய் விற்கவேண்டிய தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அதிகாரசபை கூறியுள்ளது.
யாழ்.நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகாரசபையினர் நேரடியாக சென்று 35 ரூபாய் தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தேவேளை தண்ணீர் போத்தலை சான்று பொருட்களாக கைப்பற்றியுள்ளனர். அவற்றை நீதிமன்றில் பாரப்படுத்தி குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.