யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி ம...
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், கலை கலாசார அம்சங்கள் சகிதம் பவனி இடம்பெற்றது.
கண்டி மாவட்டத்தில் இருந்து யானை கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர்.