தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் இன்று(28) ஞாயிற்றுக்கிழமை காலை10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நா...
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் இன்று(28) ஞாயிற்றுக்கிழமை காலை10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
திருமுறைத் திருவிழா ஒகஸ்ட் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கும், திருமஞ்சத் திருவிழா செப்டம்பர் 2ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கும், வேட்டைத்திருவிழா செப்டம்பர் 5ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 1மணிக்கும் சப்பறத்திருவிழா செப்டம்பர் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4மணிக்கும், தேர்த்திருவிழா செப்டம்பர் 7ம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கும் தீர்த்த உற்சவம் செப்டம்பர் 8ம் திகதி காலை 8.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.