தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க முற்பட்ட வேளையில் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டது....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க முற்பட்ட வேளையில் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க இன்று மாலை 4 மணியளவில் செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.
அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உலருணவு பொருட்களும் வழங்கப்பட்டது.
இதன் போது அங்கு கூடிய அப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலர் தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றுகூறி அங்கு குழப்பத்தில் ஈடுபட்டதுடன் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கவில்லை. அத்துடன் அப்பகுதியில் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டத்தையும் அவதானிக்கமுடிந்தது.
இதனையடுத்து அங்கு ஏற்பட்ட குழப்பம் வாய்த்தர்க்கமாக மாறவே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறினார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ புலனாய்வினர் திட்டமிட்ட செயலே செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கு கருத்து தெரிவித்தார்.