இந்திய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கள் இலங்கையில் தற்போது அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், மலையாள திரைப்படம் ஒன்றிற்காக ப...
இந்திய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கள் இலங்கையில் தற்போது அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், மலையாள திரைப்படம் ஒன்றிற்காக பிரபல நடிகர் மம்மூட்டி அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது.
மம்மூட்டியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், மம்மூட்டி உள்ளிட்ட பிரபலங்களின் வருகை, இலங்கை மக்களுக்கு ஆறுதலை தருவதுடன், சுற்றுலா துறையை மேம்படுத்தி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இது வழிவகுக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றார்கள்.