ஆளில்லா விமான தாக்குதல் ஒன்றில், அல்-கைதா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாரிஹி கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள...
ஆளில்லா விமான தாக்குதல் ஒன்றில், அல்-கைதா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாரிஹி கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சி.ஐ.ஏ அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அய்மன் அல் சவாரிஹி தனது 71வது வயதிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ம் ஆண்டு ஒசாமா பில்லாடன் உயிரிழந்ததன் பின்னரான காலத்தில், அய்மன் அல் சவாரிஹி அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அய்மன் அல் சவாரிஹி அவதானிக்கப்படுவதுடன், அவர் அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார்.