யப்பானியத் தூதரகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்கிய பணத்திற்கு வங்கி வட்டி 25 லட்சம் ரூபா மாநகர சபைக்கு கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு 4 கொம்...
யப்பானியத் தூதரகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்கிய பணத்திற்கு வங்கி வட்டி 25 லட்சம் ரூபா மாநகர சபைக்கு கிடைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு 4 கொம்பக்ரர் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வரும் சமயம் சபைக்கு ஏற்படும் செலவு பணத்திற்காக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா பணத்தை யப்பான் தூதரகம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கியது.
இவ்வாறு யப்பான் தூதரகம் வழங்கிய பணத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை தேசிய சேமிப்பு வங்கியின் யாழ்ப்பாணம் கிளையில் 100067752849 இலக்கத்தில் வைப்புச் செய்தனர்.
வைப்புச் செய்த பணத்திற்கு இதுவரை 25 லட்சத்து 35 ஆயிரத்து 407 ரூபா 75 சதம் வட்டி வழங்கப்பட்டுள்ளது.