ஜப்பான் வாகன விவகாரம் தொடர்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள தூண்டிவிட்டு ஆணையாளரை குழி பறிக்கும் முயற்சியில் யாழ் மாநகர பிரதி முதல்வர் தற்போ...
ஜப்பான் வாகன விவகாரம் தொடர்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள தூண்டிவிட்டு ஆணையாளரை குழி பறிக்கும் முயற்சியில் யாழ் மாநகர பிரதி முதல்வர் தற்போது பதில் முதல்வராக உள்ள துரைராஜா ஈசன் கங்கணப் கட்டுகிறார்
யாழ் மாநகர சபைக்கு ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட இருந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விடுவிப்பு நிதியை மீள பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் கடிதம் எழுதியிருந்தார்.
இதுதான் சந்தர்ப்பம் என பார்த்து தனக்கு வழங்கப்பட்ட நாட்களில் மக்கள் பணிகளை செய்யாது உள்வீட்டு விவகாரங்களை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதில் முதல்வர் எப்படியாவது ஆணையாளரை குறித்த பதவியில் இருந்து தூக்கி விட வேண்டும் என கங்கணம் கட்டி விட்டார்
யாழ் மாநகர முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிரதி முதல்வராக இருந்த ஈசன் பதில் முதல்வராக கடமையேற்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிக்கு பிரதி முதல்வர் கொடுக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இன்றி பிரதி முதல்வராகப்பட்டவர்.