ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 02 விக்கெட்களினால் வெற்றியீட்டியது. இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 08 விக்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 02 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.
இலங்கை அணி சார்பில் குசல் மென்டீஸ் 37 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 33 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைக்கு பங்களதேஷ் நிர்ணயித்த வெற்றி இலக்கு
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கைக்கு பங்களதேஷ் 184 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
நாணய சுழற்சியில் வென்றது இலங்கை – துடுப்பாட்டத்தில் பங்களதேஷ்
2022ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
டுபாய் சர்வதேச மைதானத்திலேயே இந்த போட்டி நடைபெறுகின்றது.
இலங்கைக்கு இன்றைய போட்டி மிக தீர்மானமான போட்டியாகும்.
இன்றைய தினத்தில் வெற்றி பெறும் அணி, பீ குழுவில் ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்